நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும். பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புன்னியம் தான். தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.
நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது, நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான, உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .
ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும். இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய, சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது.