மகா சிவராத்திரி விரதமும் அற்புத பலன்களும் !!

பிரம்மாவும் மஹாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி அடி தேடிய நிகழ்வு நிகழ்ந்தது ஒரு மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினம் என்கிறது புராணம். அந்த நாளே மகாசிவராத்திரி எனக்கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரியின் வகைகள்: சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.
 
மாசி மாதத்தில் சிவபெருமானுக்கு இன்னொரு விசேஷமான நாள். மகா சிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வரும் என்றாலும் மகா சிவராத்திரி மாசி  மாதத்தில்தான் வரும். 
 
இந்த அற்புதமான நாளில், விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். வழக்கமாக, காலையில் நடை திறக்கப்பட்டு மதியம் நடை சார்த்தப்படும். பின்னர் மாலையில்  திறக்கப்பட்டு இரவு 8 முதல் 9 மணிக்குள் நடை சார்த்தப்படுவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரிப் பெருவிழா நாளன்று, இரவில் நடை திறந்திருக்கும். அப்போது  ஒவ்வொரு கால பூஜையும் சிறப்பாக நடப்பெறும். 
 
மகா சிவராத்திரி நாளில், காலை முதலே விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். இரவு தரிசனம் முடிந்து, மறுநாள் காலையில் விரதத்தை நிறைவு செய்வார்கள். நாளை வியாழக்கிழமை மகா சிவராத்திரி. இன்று புதன்கிழமை பிரதோஷமும் குருவார வியாழனில், மகா சிவராத்திரியும் வருகிறது. அற்புதமான இந்த இரண்டு  நாட்களிலும் சிவ சிந்தனையில் திளைப்போம். வாழ்வில் சகல யோகங்களையும் ஞானத்தையும் தந்தருளுவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்