சந்திர ​கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை ​செய்யக் கூடாதவை என்ன...?

2020-ம் ஆண்டில் முதலில் வருகின்றன சந்திர கிரகணம் இது என்றாலும், இன்னும் இதே ஆண்டில் மேலும் மூன்று சந்திர கிரகணங்கள் தோன்ற இருக்கின்றன. அவை ஜூன் 5, 2020-இதுவும் நிழல் போன்ற கிரகணமாகத் தான் இருக்கும். இவை தென்னமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் பார்க்க முடியும். 
அடுத்து ஜூலை 5, 2020-ல் தெளிவற்ற கிரகணமாகவே இருக்கும், இதை அமெரிக்கா,, மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பார்க்க  முடியும். 
 
நவம்பர் 30 2020-ல் வரும் கிரகணமானது அமெரிக்கா, வடக்கு ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்  தோன்றும்.
 
​கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:
 
கிரகணம் என்பது 3 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் குவிவதாகும். அப்படி நம் மனது குவியும் போது அல்லது ஒருசெயலை கவனித்துச் செய்யும் போது அது எளிதாக வெற்றி அடைவது வழக்கம். அந்த வகையில் நாம் இறைவனின் திருநாமங்களை ஜெபித்து வர நம் பாவங்கள்  தொலையும்.
 
கிரகண நேரத்தில் குருவின் உபதேசம் கேட்டல், தெய்வத்தை வழிபடுதல், வேதங்கள் படித்தல், ஆன்மிக புத்தகங்களை படித்தல் என செய்ய இறைவனின் அருட்கடாட்சம் பல மடங்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
கிரகணத்தின் போது ​செய்யக் கூடாதவை:
 
கிரகணத்தின் போது செய்யும் காரியங்கள் பல மடங்கும் உயரும் என்பதால், நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நம் உடம்பில் இருக்கும்  உணவு பல மடங்கு இருப்பது போல் இருப்பதால், அதை செரிப்பதற்கான செயல்பாடு வயிறுக்கு இருக்காது. அதனால் உடலுக்கு  தேவையில்லாத ஆரோக்கிய சீர்கேடு ஏற்படக் கூடும்.
 
மற்ற நாட்களில் நாம் அன்றாட பணிகளை செய்யும் போது, இந்த கிரகண நேரத்திலாவது சாப்பிடாமல், இறைவனின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தால் நன்மை கூடும் என்பது ஐதீகம். கண்டிப்பாக உடல் உறவு வைத்துக் கொள்ளுதல் கூடாது.
 
அதனால் கிரகணம் இரவு 10.30க்கு தொடங்கும் முன் சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு முடித்துவிடுவது நல்லது. அப்போது  தான் உணவு செரிமானம் முடிந்து வயிறு தன் சமநிலையை அடைந்திருக்கும்.
 
கிரகணம் முடிந்த பின் செய்ய வேண்டியது
 
கிரகணம் நள்ளிரவு முடிவதால், நன்றாக உறங்கி, காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி  வருவது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்