சித்தர்கள் உமிழ்நீரை "காயப்பால்" என்று சொல்வார்கள். எச்சில் வேறு உமிழ்நீர் வேறு. எச்சிலானது நாறும். உமிழ்நீர் நாற்றமடிக்காது. இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும். டாக்டர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி அடிப்பாரே, அது போல சுரந்து அடிக்கும்.
வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்றமடிக்காது, என்று சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
தேவலோகத்திலும் இதைப்போல் பாலில்லை. இது நம்மை இறவாமல் காக்கும் அமிர்தமாகும். யோகிகள் இதை நாள்தோறும் உண்டிருப்பர். சாதாரணமாக இது தொண்டை வழியாக உள்ளே சென்று அக்னியில் விழுந்து போகும். அவ்வாறு விடாமல் நாக்கை மடித்து வாயால் நன்கு சுவைத்து நெடுநேரம் இருத்தி உண்ணவேண்டும். அப்படி உண்பவர்களுக்கு காயசித்தி ஏற்படும். உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். நீண்டநாள் வாழலாம்.