நிலை வாசலில் உட்காருவது, உண்பது, நிலை வாசலில் நின்று காணிக்கை செலுத்துவது போன்றவைகள் செய்யக்கூடாது என நம் முன்னோர்கள் அா்த்தத்தோடு தான் கூறியி௫க்கிறார்கள். நிலை வாசலில் மாவிலை தோரணம் கட்டி வெள்ளி, செவ்வாய் அன்று விளக்கேற்ற வேண்டும்.
மாவிலைகள் மிகவும் புனிதமான பொருளாக நம்பப்படுகிறது. அதேபோல் நம்முடைய வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியையும் வெளியேற்றிவிடும். வெளியிலிருந்து வீட்டுக்குள் விடாது என்ற நம்பிக்கையும் உண்டு. அதோடு இது பாசிடிவ் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் கொண்டதால் தீமை விளைவிளைவிக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிற ஆண்டி பாக்டீரியலாகப் பயன்படுகிறது.
அவ்வப்போது லஷ்மி வீட்டிற்குள் வரும் நேரம் நிலை வாசலில் அமா்ந்தோ அல்லது படுக்கவோ கூடாது. ஏனென்றால் வ௫ம் லஷ்மி வீட்டிற்குள் நுழையாது. மேலும் மஞ்சள், குங்குமம் இட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்காரம் செய்வது வீட்டிற்குள் லஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பதற்கு செய்யக் கூடியவை. எனவே, நிலை வாசலில் அமர்ந்து சாப்பிடுவது, படுத்து உறங்குவது போன்றவைகளை செய்யாதீர்கள்.
பொதுவாகவே வீட்டின் நிலைகால்கள் மரத்துண்டி செய்யும் போது உயர்ந்த ரகம் மரங்களை கொண்டு, சந்தனம், தேக்கு என செய்து வைப்பது அதற்கு சக்தி அதிகம் எந்த வித தீய சக்திகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் என்பதற்காகவே அந்த நிலை வாசலுக்கு மிகுந்த சக்தி உண்டு எனவே நாம் கடவுளை வணங்கும் போதும் நிலைக்கு கற்பூரம் காட்டுவது மிக நல்லது.