வளர்பிறை அஷ்டமியில் எவ்வாறு வழிபாடுகளை செய்யவேண்டும் தெரியுமா...?

வளர்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும்போது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானதை தருமாறு வேண்டவேண்டும். 

வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும்போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.
 
நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும். தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் தொடங்கும். பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும். இதனை எந்த  கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம்.
 
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற நியதி கிடையாது; வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும்  ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெரு மானை வழிபடலாம். 
 
வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள், ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்ய கூடாது. மீறினால், வழிபாட்டின் பலன்கள் கிட்டுவது கடினம் என்பது ஐதீகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்