எந்த கிழமைகளில் பைரவரை வழிபட்டால் என்ன பலன்...?

பைரவரை வழிபட எந்தெந்த கிழமைகள் சிறப்பானது, பைரவர் எந்த கிழமைகளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். காசி நகரின் காவல் தெய்வம் இவர். நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான்.
 
ஞாயிற்றுக்கிழமை: ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும். 
 
திங்கட்கிழமை: வில்வார்ச்சனை செய்தால் சிவன் அருள் கிடைக்கும்.
 
செவ்வாய்க்கிழமை: மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்.
 
புதன்கிழமை: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.
 
வியாழக்கிழமை: விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூன்யம் விலகும்.
 
வெள்ளிக்கிழமை: மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வச் செழிப்பு உண்டாகும்.
 
சனிக்கிழமை: சனி பகவானுக்கு குரு பைரவர், ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச்  சனி விலகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்