கரூர் மாரியம்மனுக்கு தங்கத்தேர் இழுத்த பக்தர்கள்!!

மார்கழி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டும், இந்தாண்டின் (2019) ஆம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டும் உலக நன்மை வேண்டி கரூர் மாரியம்மனுக்கு தங்கத்தேர் இழுத்தனர்.
 
பொதுமக்கள் தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மனாக  விளங்குவது கரூர் மாரியம்மன் ஆலயம் ஆகும், இந்த திருத்தலம் பழமை வாய்ந்ததும் மற்றும் புராதான மிக்கதாகும்.

இந்நிலையில், தமிழ்  மாதமான மார்கழி மாதத்தின் வெள்ளிக்கிழமையை முன்னிட்டும், இந்தாண்டு (2019) ஆம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டும்,  உலக நன்மை வேண்டியும், எல்லா இடங்களிலும் அமைதி நிலவ வேண்டியும் கோரி, கரூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து  வழிபட்டனர்.
 
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கத்தேரினை ஆலயத்தினை சுற்றி வடம்பிடித்து நிலைநிறுத்தினர். முன்னதாக பலவகை வண்ண மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. பல்வேறு வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேர் வலம் வந்து பக்தர்களுக்கு மாரியம்மன் காட்சியளித்தார். இதற்கான முழு  ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மட்டுமில்லாது பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
 


சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்