மாசி அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டு பலன்கள் !!

புதன், 2 மார்ச் 2022 (15:48 IST)
மாசி அமாவாசை இன்றைய தினம். எனவே, அமாவாசை தர்ப்பணத்தை மறக்காமல் நிறைவேற்றுங்கள். முன்னோர் ஆராதனை செய்வது ரொம்பவே முக்கியம் என அறிவுறுத்துகின்றனர்.


அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து, அவர்களை வணங்குவதும், அவர்களை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலங்கள் வழங்குவதும் நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழச் செய்யும்; உயரச் செய்யும் என்பது ஐதீகம்.

அமாவாசை நாளில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கச் சொல்கிறது சாஸ்திரம். வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக விவரிக்கி றார்கள் ஆச்சார்யர்கள். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். அதேபோல், மாதந்தோறும் வருகிற அமாவாசை அன்று தர்ப்பணம் பித்ருக்கடனைத் தீர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

அமாவாசை என்பது முன்னோருக்கு உரிய நாள். எனவே, இந்த நாளில், பித்ருக்களை நினைத்துச் செய்யும் எந்தத் தர்ம காரியங்களாக இருந்தாலும், அதில் மகிழ்ந்த முன்னோர்கள், நம் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்கள். இரட்டிப்புப் பலன்களை வழங்குவார்கள்.

தடைப்பட்ட பிள்ளை பாக்கியம், கிடைக்கப்பெறுவது உறுதி. வீட்டில் தரித்திரம் விலகி, ஐஸ்வரியம் பெருகும். நம் சந்ததி சிறந்து விளங்குவார்கள். அவர்களால், மொத்தப் பரம்பரைக்குமே மரியாதை யும் கெளரவமும் கிடைத்து, சந்தோஷமும் நிறைவு மாக வாழலாம் என்பது உறுதி என்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்