ஸ்படிகமணி மாலை அணிந்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் !!

பல ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்கில்லாத, தூசிகள்  இல்லாத, கம்பிகள் இல்லாத, உடைசல்கள் இல்லாத, தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில், உருண்டையாகவும், பட்டை தீட்டியும்  தயாரிக்கலாம்.

பின்னர், ஒவ்வொரு மணியிலும் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். இந்த ஸ்படிகப் பாறைகள், பெரும் மலையின்  பாறைகளைப் போலில்லாமல் ஆறு பட்டைகள் கொண்ட தூண்கள் போலவும், ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக்  கிடப்பதுண்டு. 
 
இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. உயர்ந்த வகை ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால்  தெரியாது, நீரோடு நீராக ஒன்றி இருக்கும்.
 
முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தர ஸ்படிகமணி மாலைதான் நல்ல பலனைத்  தரும். துல்லியமற்றதும், ஊடுருவும் தன்மையற்றதும், வெள்ளையாகவும் இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும்.
 
ஸ்படிக மணியை நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும். முழுமையான கவசமாக ஸ்படிக மணி விளங்குகிறது.
 
இதனால், தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும். ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து மாலை அணியக்கூடாது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்