பிரதோஷ காலத்தில் வாங்கித்தரப்படும் அபிஷேக பொருட்களின் பலன்கள் !!

வியாழன், 16 டிசம்பர் 2021 (10:50 IST)
பிரதோஷ நாளில், மாலை வேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று, நந்திதேவர், சிவபெருமான் மற்றும் குருவாரம் என்பதால் நவகிரகத்தில் உள்ள குருபகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை கண்ணார கண்டு, மனதாரப் பிரார்த்தனை செய்யலாம்.

மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால் சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலிய அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள். 
 
அபிஷேகப் பொருட்களும், பலன்களும் :
 
பால் வாங்கி தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கி தர தனலாபமும், வளங்களும் உண்டாகும். 
 
தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கி தர விளைச்சல் பெருகும். 
 
பஞ்சாமிர்தம் வாங்கி தர செல்வம் பெருகும். நெய் வாங்கி கொடுத்தால் முக்தி பேறு கிடைக்கும்.
 
இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கி தர சுகமான வாழ்வும், சர்க்கரை வாங்கி தர எதிர்ப்புகளும் மறையும்.
 
சந்தனம் வாங்கி தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.
 
இந்த குருவார பிரதோஷத்தில் சிவனையும், நந்திதேவரையும் மனதார வழிபட்டு, வாழ்வில் வளங்களை பெறுவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்