தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

உலகில் எங்கும் நீக்கமற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார் இறைவன். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.

அவ்வாறு ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன.
 
தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக்  கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.
 
தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது.
 
வீடுகளில் தீபத்தை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்