அஷ்ட லட்சுமிகளை பூஜை செய்வதால் உண்டாகும் பலன்கள்....!!

லட்சுமிகள் எட்டு, அதனையே “அஷ்ட லட்சுமிகள்” என்று அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும்.

இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெறமுடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்கவேண்டும். பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள்  திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்திரமாக குடிகொண்டு வசிப்பாள்.

தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும். இல்லங்களில் செல்வம் பெருகும்.
 
1. ஆதிலட்சுமி - நோய்நொடி அற்ற உடல்நலம் பெற்று நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
 
2. தானியலட்சுமி - உணவு தானியங்கள் தாராளமாகக் கிடைத்து பசிப்பிணி நீங்குவதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
 
3. தைரியலட்சுமி - வாழ்வில் ஏற்படும் எத்தகையை இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு சமாளிக்க தைரியம் பெறுதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
 
4. கஜலட்சுமி - வாழ்வில் அனைத்து நற்பாக்கியங்களையும் பெறுவதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
 
5. சந்தானலட்சுமி - குழந்தைப்பேறு புத்திர பாக்கியம் சித்திப்பதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
 
6. விஜயலட்சுமி - கைக்கொண்ட நற்காரியங்களில் வெற்றிப் பெறுதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
 
7. விதயாலட்சுமி - கல்வியும், அறிவும், ஞானமும் பெறுதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.
 
8. தனலட்சுமி - செல்வம் பெருகி பன்மடங்காவதற்கு பூசிக்க வேண்டியத் திருவுருவம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்