12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்ன தெரியுமா...?

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் முன்னேற்றம் ஏற்படும்.
 
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை தானமாக கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.
 
கடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி  செல்வத்தை சேர்க்க உதவும்.
 
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி  ஏற்படும்.
 
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
 
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். ஆதரவற்ற மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பதால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.
 
விருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும்.
 
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு  பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.
 
மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.
 
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக  கொடுக்க வேண்டும்.
 
மீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம்  அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்