ஜெஜூரியில் உள்ள கண்டோபா கோ‌யி‌ல்

வியாழன், 19 மார்ச் 2009 (14:47 IST)
ஜெஜூரியில் உள்ள கண்டோபா கோயிலுக்கு இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்கிறோம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஜெஜூரி, கண்டோபா கோயிலினால் மிகவும் அறியப்பட்டுள்ளது. அதனை கண்டோபாவின் ஜெஜூரி என்றே அழைத்துள்ளனர்.

இந்த கோயிலின் கடவுள் மால்சகந்த் அல்லது மால்ஹரி மார்டண்ட் தங்கார் என்ற பழங்குடி மக்களால் வணங்கப்பட்டுள்ளார்.

மாராட்டிய மக்களின் வழக்கப்படி, புதிதாக திருமணமான தம்பதியினர் இந்த கோயிலுக்குச் சென்று வருவது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

புனே - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பால்டான் நகரத்திற்கு அருகே ஜெஜூரி அமைந்துள்ளது. இந்த கண்டோபா கோயில் ஒருசிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. சுமார் 200 படிகட்டுகள் ஏறிச் சென்றுதான் இறைவனை தரிசிக்க முடியும்.

இந்த மலையில் இருந்து பார்க்கும்போது ஜெஜூரி மிக அழகான நகரமாகக் காட்சி அளிக்கிறது.

webdunia photoWD
இந்த கோயில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டபம் மற்றும் கர்பக்கிரகம். மண்டபப் பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூடி இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர். கர்ப்பக்கிரகத்தில் கண்டோபாவின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆமையின் உருவம் மற்றும் பல்வேறு விதமான ஆயுதங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த இடம் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிவாஜி தனது தந்தையான ஷாஹ்ஜியை வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்த இடமும் இதுதான். முகலாய ஆட்சிக் காலத்தில் அரசர்கள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து சென்றுள்ளனர்.

webdunia photoWD
இந்த கோயிலில் ஆண்டு தோறும் யாத்ரா என்ற திருவிழா நடத்தப்படுகிறது. சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபடுவார்கள்

எப்படி செல்வது?

சாலை மார்கம் : ஜெஜூரி புனேவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. புனேயில் இருந்து பேருந்து மற்றும் டேக்சியில் ஜெஜூரி செல்லலாம்.

ரயில் மார்கம் : ஜெஜூரி ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம். புனே - மிராஜ் ரயில்வே மாரக்த்தில் உள்ளது.

விமான மார்கம் : புனே விமான நிலையம் அருகில் உள்ளது.