வீர் கோகா தேவ் கோயில்!

சனி, 18 அக்டோபர் 2008 (17:50 IST)
இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தவீர் கோகாதேவ் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம்.

webdunia photoWD
பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும், வெகு தூரத்தில் இருந்தும் இந்த கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்கின்றனர்.

நாத் இன மக்களுக்கு மிக முக்கியமான தளமாக இந்த கோயில் திகழ்கிறது.

சாதாரண மக்களின் இறைவன் என்று புகழப்படும் கோகாஜி தான் இந்த கோயிலின் நாயகனாகத் திகழ்கிறார். பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இவரது வழியைப் பின்பற்றி வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் இவர் எந்த மதத்தையும் சாராமல் இருந்ததுதான்.

கோகாஜி, ராஜஸ்தான் மாநிலம் சுருவில் பிறந்தார். சுருவின் அரசு அதிகாரத்தில் இருந்த ஜெய்பர் மற்றும் பாச்சல் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் கோகாஜி. அவரது தந்தையின் ஆட்சிக்குப் பின்னர் பிரிதிவிராஜ் செளஹான் ஆட்சிப்பொறுப்பேற்றார். பிரிதிவிராஜ் செளஹானுக்கு அடுத்ததாக கோகாஜி தான் அதிகப் புகழுடன் ஆட்சி நடத்தினார். ஹரியானாவின் சட்லஜ் முதல் ஹன்சி வரை இவரது ஆட்சி பரவியிருந்தது.

webdunia photoWD
கோகாஜி கோயிலுக்கு அருகில் வாழ்பவர்கள் கோகாஜியை பாம்புகளின் கடவுளாக வழிபடுகின்றனர். கோகாஜியை, கோகாஜி செளஹான், குக்கா, ஜாஹிர் வீர், ஜாஹீர் பீர் என பல்வேறு பெயர்களின் அன்போடு அழைக்கின்றனர்.

தட்டகோடாவில் குரு கோர்க்ஷ்நாத் ஆசிரமும் அமைந்துள்ளது. அங்கு கோகாஜிதேவ் குதிரையில் அமர்ந்தவாரு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அங்கும் சென்று பிரார்த்தனை செய்கின்றனர்.

webdunia photoWD
கோகாஜி பிறந்த இடத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கும் ஹனுமங்காடி மாவட்டத்தில் உள்ள கோகமாடி தாமின் என்ற இடத்தில்தான் கோகாஜியின் சமாதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் இரண்டு பூசாரிகள் உள்ளனர். ஒருவர் இந்துவாகவும், மற்றொருவர் இஸ்லாமியராகவும் இருக்கிறார். மத ஒற்றுமையை பறைசாற்றுவதாக இது அமைந்துள்ளது. ஆவணி மாத பெளர்ணமி திணத்தில் இருந்து புரட்டாசி மாதம் பெளர்ணமி நாள் வரை இங்கு திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கோகா தேவின் ஆசியைப் பெறுகின்றனர். அப்போது இந்த கோயிலே வண்ண மயமாகக் காட்சி அளிக்கிறது.

webdunia photoWD
கோகா தேவின் கோயிலுக்கு வரும் எவரும், அவரது குண நலன்களையும், பண்புகளையும் தெரிந்து கொண்ட பின்னர், கோகாதேவின் பக்தர்கள் ஆகிவிடுவார்கள். கோகா தேவின் கடமையுணர்ச்சியும், ஒழுக்கமும் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் உள்ளது.

இந்த வார புனிதப் பயணம் உங்களுக்கு எப்படி அமைந்தது என்று எங்களுக்கு எழுதுங்கள்.

எப்படிச் செல்வது

விமான மார்கம் : ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து 250 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.

ரயில் மார்கம் : சதால்புர் ரயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

சாலை மார்கம் : சதால்புர் பேருந்து நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த கோயில் உள்ளது. பேருந்துகளும், டாக்சிகளும் கிடைக்கின்றன.