‌சி‌ற்‌றித‌ழ் : வார்த்தை

சனி, 19 ஏப்ரல் 2008 (11:10 IST)
இதழ் ஒன்று
ஏப்ரல்: 2008

ஆசிரியர்: பி.ச.குப்புசாமி

இணையாசிரியர்: பி.கே.சிவகுமார்

webdunia photoWD
["தெளிவுபெற அறிந்திட... தெளிவு பெற மொழிந்திட என்று அட்டையில் தாங்கிய முழக்கத்துடன் வெளிவந்துள்ள மாத இதழ் வார்த்தை. இது சிற்றிதழ் பாணியில் வெளிவந்துள்ளது. "இசை, திரை, ஓவியம், அரசியல், சமூகம், மொழிபெயர்ப்பு, சட்டம் வணிகம், பொருளாதாரம் என்ற துறைகள் தோறும் விரிவோம். அறிந்தவர்களும் தெரிந்தவர்களும் உரையாடும் கள்மாவோம்" என்று இணையாசிரியர் சிவகுமார் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இதழில் ஜெயகாந்தனின் பேட்டி ஒன்று வந்துள்ளது. சுஜாதாவிற்கு கோ.ராஜாராம் அஞ்சலிக் கட்டுரை எழுதியுள்ளார். இன்னும்பல சிந்தனைக்குரிய பகுதிகளை உள்ளடக்கி வார்த்தை இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழிலிருந்து வெப் வாசகர்களுக்கு "தலாய் லாமா நோபல் பரிசு ஏற்புரை" என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரையின் ஒரு சில பகுதிகளை வழங்குகிறோம்]
--------------------------------------------------------------------------

...திபெத் மக்கள் தொடர்ந்து ஒரு திட்டமிட்ட அமைப்பு ரீதியான அடக்குமுறைத் திட்டத்தின் கீழ் தம்முடைய தேசிய, கலாசகார அடையாளங்கள் அழிக்கப்படுவதை எதிர் கொள்கிறார்கள். உண்மை, தைரியம், உறுதி ஆகியவற்றை எங்களது ஆயுதமாகக் கொண்டு நடக்கும் எங்களது போராட்டத்தினால் திபெத் விடுதலை அடையும் என்று நாங்கள் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டை இந்த பரிசு மறுபடியும் அங்கீகரிக்கிறது.

உலகின் எந்தப் பகுதியிலிருந்து வந்திருந்தாலும் நாம் அடிப்படையில் நாம் ஒரே மாதிரியான மனிதர்கள்தாம். நாம் எல்லோரும் சந்தோஷத்தைத் தேடவும் துன்பத்தைத் தவிர்க்கவுமே முயல்கிறோம். நமக்கு ஒரே மாதிரியான மனிதத் தேவைகளும் கவலைகளும் இருக்கின்றன. மனிதர்களான நாம் எல்லோரும் சுதந்திரத்தையும், தனிமனிதராகவும், சமூகக் குழுவாகவும், நம் தலைவிதியை நாமே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையையும் விரும்புகிறோம். இது மனித இயற்கை. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வரைக்கும் மாபெரும் மாற்றங்கள் உலகெங்கும் நடந்து வருகின்றன என்பதே இதற்கு சாட்சி.

கடந்த வருடம்(1988) ஜூனில், சீனாவில் ஜன நாயகத்துக்கான பொதுமக்கள் இயக்கம் வன்முறை மூலம் கடுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பகிரங்கப் போராட்டம் வீண் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் உலகெங்கும் தீப்போல் பரவும் சுதந்திர வேட்கையின் பாதிப்பில் சீன மக்களிடமும் சுதந்திர வேட்கை தூண்டப்பட்டுள்ளது. இந்த சுதந்திர வேட்கையிலிருந்து சீனா தப்பி விடமுடியாது...

... மனிதர்களின் பரஸ்பர புரிதல்களினாலும் அன்பினாலும் எல்லா உயிர்களின் வேதனையையும் துயரத்தையும் குறைத்திட முடியும் என்று நான் நம்புகிறேன். அடக்கு முறை புரிவோருக்கும், என் நண்பர்களுக்குமாக, நம் எல்லோருக்காகவும் என் பிரார்த்தனையை நான் மேற்கொள்கிறேன்.