விந்து விரைவாக வெளியேறுவதை தடுக்க சுலபமான வழிகள்

வியாழன், 23 ஜூன் 2016 (19:43 IST)
மனித வாழ்வில் உடல் உறவு என்பது அத்தியாவசியமான அதேசமயம் தவிர்க்க முடியாத ஒன்று.


 

 
படுக்கையில், பெரும்பாலான ஆண்களுக்கு பொதுவான பிரச்சனையாக கருதப்படுவது , உடல் உறவின் போது விந்து விரைவில் வெளியாவதுதான். இதுபற்றிய போதுமான தெளிவு பெரும்பாலான ஆண்களுக்கு இல்லை. அதனால்தான், இரவு நேரங்களில், தனியார் தொலைக்காட்சிகளில் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு செல்லும் மருத்துவர்களிடம் பலர் இந்த பிரச்சனையை முன் வைக்கிறார்கள்.
 
பொதுவாக எல்லா ஆண்களும், படுக்கையைறையில், அதிக நேரம் உடல் உறவில் ஈடுபடவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலருக்கு விந்து விரைவில் வெளியாகிவிடுவதால் முழுதிருப்தி கிடைக்காமல் போகிறது.
 
ஆனால், விந்து வெளியாவதை சில எளிய பயிற்சிகள் மூலம் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். அவற்றை பற்றி இங்கு காண்போம்.
 
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பின், அதாவது பெண் உறுப்பில் ஆண் உறுப்பு நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும். ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது ஆண்மை குறைபாடுதான்.
 
இந்த பிரச்சனை நிறைய ஆண்களுக்கு இருக்கிறது. விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.
 
முதலில், தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 
முதலில், உடலுறவின் போது, உடலை விட மனம்தான் அதிகம் இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வேக வேகமாக செயல்படுவதை தவிர்த்து, இயல்பாக, அமைதியாக, நிதானமாக ஈடுபடவேண்டும். ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் இலகுவாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளை நடத்தும்போது நேரத்தை தேவையான அளவுக்கு நீட்டிக்க முடியும்
.
உங்களால் அப்படி முடியவில்லை என்றால், அதற்கும் இருக்கிறது ஒரு சுலபமான ஒரு குறுக்கு வழி. அதாவது, உறவு கொள்ளும் போது,  மனத்தை உறவு கொள்ளும் பெண்ணிடத்து இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலை நினைத்தல் நல்லது. அதாவது நண்பர்களுடன் பேசியது அல்லது பாட்டு கேட்பது, நகைச்சுவையை ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக்கொண்டு உறவில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
 
அடுத்து, சுய இன்பம் மூலம் சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அது நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.
 
சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள். மனதில் உள்ள காம எண்ணம் குறைவதற்குள்  அவசர அவசரமாக கையை செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள்.  இதே பழக்கம்தான் நாம் உடல் உறவில் ஈடுபடும்போதும் நமக்கு வரும். எனவே முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து உமிழ்ந்து ஓய்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
 
விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போதுதான் நல்ல பலன் தரும்.
 
முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் தந்திரத்தை வெற்றிகரமாக உணர்ந்து கொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது நல்ல பலனைத் தரும். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது
 
பொதுவாக, உடல் உறவில் ஆண்கள் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது சுலபமாகவும் இன்பமாகவும் இருக்கலாம். ஆனால்  இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது நல்ல பலன் அளிக்கும். அனைத்து உடற்சார்ந்த செயலையும் ஆண்கள் மட்டுமே செய்யாமல், பெண்களை மட்டுமே இயங்குவதாக  வைத்துக்கொண்டால் ஆண்கள் விரைப்புத்தன்மையுடன் நீண்ட நேரம் இருக்க முடியும்.
 
ஆணுறுப்பை மட்டுமே செக்ஸ் செயல்களுக்கு பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக  உறவின் நேரத்தை நீட்டிக்க முடியும்.
 
இந்த பயிற்சிகளுக்கு பின்னும் உங்களுக்கு விந்து விரைவில் வெளியேறினால், மருத்துவர்களை ஆலோசித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்