ஆணுறை பயன்படுத்தாமல் கருத்தரிப்பதை தவிர்ப்பது எப்படி?

திங்கள், 3 ஏப்ரல் 2017 (19:18 IST)
திருமணமான புது தம்பதிகள் பெரும்பாலும் குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகின்றனர். இதனால் அவர்கள் ஆணுறை, கருத்தடை மத்திரை என பயன்படுத்துகின்றனர். இவைகள் இல்லமலே கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.


 

 
கருத்தரிப்பதை தவிர்க்க பெரும்பாலும் எல்லோரும் ஆணுறையும், கருத்தடை மாத்திரை போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தரம் இல்லாத சில ஆணுறைகள் கருத்தரிப்பதை தடுக்க உதவுவதில்லை. கருத்தடை மாத்திரைகள் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும். இவைகளை பயன்படுத்தாமல் கருததரிப்பதை தடுக்க சில வழிகள் உள்ளன. ஆனால் அவைகள் 100 சதவீதம் கைக்கொடுப்பதில்லை, 90 சதவீதம் கட்டாயம் கைக்கொடுக்கும்.
 
சரியான நாட்களை தேர்ந்தெடுத்து உறவு கொள்ள வேண்டும். மாதவிலக்கு ஆரம்பம் ஆகும் முன் நான்கு நாட்கள் மற்றும் மாதவிலக்கு முடிந்து நான்கு நாட்கள் உறவு கொள்ளலாம். ஏன்னென்றால் அப்போது கரு பலவீனமாக இருக்கும். இதனால் கருத்தரிக்க வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் இந்த முறை 100 சதவீதம் கைக்கொடுப்பதில்லை, 90 சதவீதம் கட்டாயம் கைக்கொடுக்கும்.
 
காப்பர் - டி என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் பொருத்தும் கருவி. இதை மருத்துவரின் உதவியுடன் பொருத்திக் கொள்ளலாம். இதுவும் கருத்தரிப்பதைத் தடுக்கும். குழந்தை பெற்ற தம்பதிகள், குழந்தை போது என்றால் கருத்தடை செய்துக்கொள்ளலாம்.
 
இந்த வழிமுறைகள் பின்பற்றினால் கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்