பாலுறவு பற்றிய சிறந்த நூல்கள்

வியாழன், 4 பிப்ரவரி 2016 (21:58 IST)
பாலுறவைப் பற்றி பல்வேறு நிபுணர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். ஒவ்வொரு நூலும் தம்பதிகள் இருவருமே படிக்கத் தக்கவைதான்.


 

 
காம நூல்களை படிப்பதோ வாங்குவதோ அசிங்கம் என்று நினைக்காமல் பல்வேறு சந்தேகங்களை போக்கவும், தவறுகள் திருத்தப்படவும் உதவும் என்பதை உணரலாம்.
 
காமசூத்ரா
 
பாலுறவைப் பற்றி நமக்குக் கிடைத்துள்ள முதல் நூல் காமசூத்ரா. இந்த புத்தகத்தை எழுதியவர் வாத்சாயனர். (கி.பி. 300 முதல் 400). இந்த புத்தகத்தில் தைரியமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பாலியல் சார்ந்த தகவல்களை விவரித்துள்ளார். இந்த நூல் முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது.
 
காமம் என்பது கேட்டல், பார்த்தல், உணர்தல், நுகர்தல், முகர்தல் என்ற ஐம்புலன்களால் மட்டுமின்றி மனமும், ஆத்மாவும் சேர்ந்து தோன்றுவது என வாத்சாயனார் காமசூத்ராவில் குறிப்பிட்டுள்ளார்.
 
ரதிரகஷ்யா
 
கொக்கோகர் (கி.பி. 1000 முதல் 1200 வரை) என்பவர் ரதிரகஷ்யா என்ற நூலை தொகுத்தார். இதில் பெண்கள் எளிதில் பாலுணர்வுத் தூண்டுதலுக்கு ஆளாகும் பகுதிகள் மற்றும் தூண்டப்படும் காலம்ட பற்றிய நான்கடுக்கு விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
 
ஆண் - பெண்களின் மூன்று பிரிவுகளையும், பிறப்பு உறுப்பின் அளவைக் கொண்டு பாலுறவில் ஒன்பது நிலைகள் இருப்பதையும் இந்த புத்தகத்தில் கொக்கோகர் கூறியிருக்கிறார்.
 
நகர சர்வஸ்வம் 
 
இந்த நூலை பத்மஸ்ரீ (கி.பி.1000) என்ற பவுத்தத் துறவி எழுதியுள்ளார். இந்த நூலில் சங்கத் எனப்படும் பாலுறவுக் குறிப்புச் செய்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதில் காதல் முதல் மற்ற விவரங்கள் என பல்வேறு விஷயங்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
பஞ்சயாகா 
 
கவி சேகரா என்பவர் இந்த நூலை இயற்றியவர். பாலுணர்வை தூண்டும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைப் பொருட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். தளர்ந்த மார்பகத்தை உயர்த்தி நிறுத்தும் மருந்து போன்ற சில குறிப்பிட்ட மருந்துப் பொருட்களைப் பற்றியும் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
ரதி மஞ்சரி
 
ஜெயதேவா என்பவர் எழுதிய நூல்தான் ரதி மஞ்சரி என்ற கவிதை நூலாகும். காதல் நுணுக்கங்களைப் பற்றி இவர் அழகாக விவரித்துள்ளார். இது மிகச் சிறிய புத்தகமாகும், ஆனால் சிறந்த நடையில் எழுதப்பட்டது.
 
அனங்கரங்கா
 
அனங்கரங்கா என்ற நூலை எழுதியவர் கல்யாணமல்லா ஆவார். இந்த நூலில் தாம்பத்திய உறவை வெற்றிகரமாக நடத்துவது பற்றியும், புதிய நபரை தேர்வு செய்யும் முறையைப் பற்றியும் கூறியுள்ளார்.
 
ஜெயமங்களா
 
யசோதரா என்பவர் காம சூத்திரத்திற்கு ஜெயமங்களா என்ற உரையை எழுதியுள்ளார். இது உரையாக அல்லாமல் தனிப்பட்ட புத்தகமாகவே விளங்குகிறது. இதில் வாத்சாயனர் மற்றும் பிறரால் கையாளப்பட்ட பதங்கள் கையாளப்பட்டுள்ளன. 
 
இது போன்ற நூல்கள் தங்களது சந்தேகங்களுக்கு நிவாரணம் காண உதவும் வகையில் உள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்