படுக்கையறையில் புகுந்து விளையாட வேண்டுமா?

திங்கள், 20 ஜூன் 2016 (19:24 IST)
படுக்கையறையில் சிறப்பாக செயல்பட இயற்கை நமக்கு பல மூலிகைகளை அளித்துள்ளது. ஆனால் நாம்தான் மருத்துவரையும், மாத்திரைகளையும் தேடி ஓடுகிறோம்.


 

 
ஆண்களின் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்க இயற்கை நமக்கு அளித்திருக்கும் வரப்பிரசாதம்தான் அஸ்வகந்தா மூலிகை. இதற்கு அமுக்கிரா கிழங்கு என்ற பெயரும் உண்டு. 
 
இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகை உண்டு.  அதில் சீமை அமுக்கிரா கிழங்கே ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.  அதனால் அதற்கு மூலிகை வயாகரா என்ற பெயரே உண்டு.
 
மேலும், அதற்கு இந்திய ஜின்செங் என்ற பெயரும் உண்டு. அந்த சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்துவை பெருக்கும்.
 
ஆண்மையை பெருக்குவது மட்டுமில்லாமல், அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். மூளையின் அழற்சி, வயோதிகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும். நமது உடலில் உள்ள Free radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை அஸ்வகந்தா சரிசெய்யும்.


 

 
அஸ்வகந்தாவின் முழுச் செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
அஸ்வகந்தாவின் நன்மைகள்
 
உங்கள்  உடல் வலிமையை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
உங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும்.
 
உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
 
உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்.
 
உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்.
 
உங்களது இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)
 
சித்த மருத்துவ கடைகளில் அஸ்வகந்தா லேகியம் எளிதாக கிடைக்கும். பவுடராகவும் கிடைக்கும். பயன்படுத்துங்கள். குதிரை சக்தி பெற்று, படுக்கையறையில் புகுந்து விளையாடுங்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்