ஓரின சேர்க்கைக்கு தடை‌வி‌தி‌க்க முடியாது-உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌ம்

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (12:08 IST)
ஓரின சேர்க்கையாள‌ர்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடையு‌ம் வகை‌யி‌ல், ஓ‌ரின சே‌ர்‌க்கைக்கு அனுமதி வழங்கி டெல்லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த தீர்ப்புக்கு தடை விதிக்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறுத்து விட்டது.

இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவின் படி ஓரின சேர்க்கை குற்றமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த பிரச்சினை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த டெல்லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம், ஓரின சேர்க்கை சட்ட ரீதியாக செல்லும் என்று கடந்த ஜுலை 2-ந் தேதி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இ‌ந்‌தியா‌வி‌ல் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்க வகை செய்யும் 377-வது பிரிவு தனி மனித உரிமையை பறிப்பதாக உள்ளது என்றும் அரசியலமைப்பின் மதிப்புக்கும், பெருந்தன்மைக்கும் எதிராக அமைந்து இருக்கிறது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இரு‌ந்தது.

டெல்லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் இந்த தீர்ப்புக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. டெல்லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் தீர்ப்பை எதிர்த்து சுரேஷ்குமார் கவுசல் என்ற ஜோதிடர் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் மே‌ல்முறை‌‌யீடு செய்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்; டெல்லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் தீர்ப்பு சமுதாயத்தில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

அந்த மனுவை விசாரித்த உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌ம், இந்த பிரச்சினையில் மத்திய அரசின் பதிலுக்காக காத்து இருப்பதாக கூறி, உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்த நிலையில், டெல்லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி யோகா குரு பாபா ராம்தேவின் தனிச் செயலாளர் திஜிரவாலா மற்றும் ஒரு கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் இரு மனுக்கள் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய அம‌ர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, டெல்லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டனர்.

டெல்லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 மனுக்களும் ஒரே வழக்காக சேர்த்து வருகிற செப்டம்பர் 14-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்