ஆஸ்திரேலியாவின் வில்லியாவுட் பகுதியைச் சேர்ந்த 7 வயதான சிறுமி மோனிகா சமான், ஒரு நாள் அதே பகுதியில் உள்ள உலகின் முன்னணி அசைவ உணவு நிறுவனமான கேஎப்சி (கென்டுகி பிரைட் சிக்கன்) விடுதியில் கோழிக்கறி சாப்பிட்டார்.
அடுத்த நாளே மோனிகா சமனுக்கு மூளை பாதித்தது. நுரையீரல் செயலிழந்தது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவள் உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்தார். அவள் சாப்பிட்ட கோழிக்கறி கெட்டுப் போயிருந்ததும், விஷத்தன்மை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் (சல்மோனெலா) அதில் இருந்ததும்தான் காரணம் என்று மருத்துவமனை அறிவித்தது.
இதற்காக கேஎப்சி ரூ.48 கோடி இழப்பீடு அளிக்கக் கோரி நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மோனிகா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவளது வக்கீல் கூறுகையில், முன்னணி ஓட்டல்கள் உட்பட உணவகங்களின் சமையலறை பராமரிப்பு மோசமாக இருப்பதுண்டு. இந்த கோழிக்கறி சுத்தம் செய்வதற்கு முன்பே சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கேஎப்சி உணவக சமையலறையில் கோழிக்கறி சுத்தப்படுத்தும் ஊழியரை விசாரித்தால் உண்மை வெளிவரலாம் என்றும் அவர் தெரிவித்தார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.