அதற்கு அந்த சிறுவர்கள், தங்களது உண்மையான விவரத்தை அளித்தனர், ஒருவன் சதீஷ் (வயது 13), மற்றவன் சந்தோஷ் (வயது 8) என்பதும் அவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதில் சதீஷ் கூறுகையில், நான் பெங்களூர் அக்ரஹாரம் 5-வது தெருவில் வசித்து வருகிறேன். என் அப்பா சுரேஷ் மிகவும் கண்டிப்பானவர். என்ன செய்தாலும் கோபப்படுவார். வீட்டை விட்டு விளையாட சென்றாலும் திட்டுவார்.
நேற்று முன்தினம் எங்கள் வீட்டு முன்பு பக்கத்து வீட்டு சிறுவன் சந்தோஷ்டன் காற்றாடி விட்டு விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே அப்பாவின் நண்பர் சந்திரன் வந்தார். அவர் என்னிடம், நீ காற்றாடி விட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாயா? உன் அப்பாவிடம் சொல்கிறேன் என்றார். இதைக்கேட்டதும் எனக்கு பயம் ஏற்பட்டது. பயத்தில் பக்கத்து வீட்டு பையன் சந்தோஷுடன் சென்னைக்கு ரெயில் ஏறி வந்து விட்டேன். இங்கே என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தோம். வீட்டில் இருந்து வந்தோம் என்று சொன்னால் அப்பா திட்டுவார் என்று பயந்து, எங்களை யாரோ கடத்தி வந்து விட்டார்கள் என்று பொய் சொன்னோம். இதை அப்பாவிடம் சொல்லி விடாதீர்கள் என்று கூறி அழுதான்.
உடனடியாக குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரைக் கூறப்பட்டது. அவர்களது பெற்றோர்களுக்கும் விவரம் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளை அன்புடன் நடத்த வேண்டும். இல்லையென்றால் இது போல் குழந்தைகள் வழி தவறி செல்வது உண்டு. பொய் சொல்லக்கூடிய சூழ்நிலையையும், தவறான பாதைக்கும் அவர்களை அழைத்து செல்கிறது. பெங்களூரில் இருந்து வந்து கடத்தல் நாடகம் ஆடிய மாணவர்களிடம் போதுமான அறிவுரைகளை சொல்லியிருக்கிறோம். அவர்களின் பெற்றோர்கள் வந்தவுடன் இது குறித்து அவர்களிடமும் நாங்கள் பேசுவோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.