இதற்கு ஒரு உதாரணமாக ஒரு விஷயத்தை இங்கு கூறுகிறோம்..
webdunia photo
WD
ஜார்ஜ் பெர்னாட்ஷா தாம் இறக்கும் வரையில் தாடி வைத்திருந்தார். ஒரு சமயம் செய்தியாளர் ஒருவர் பெர்னாட்ஷாவை அணுகி "எதற்காக நீங்கள் தாடி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தாடி வைத்துக்கொள்வதால் லாபம் உண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார். "சந்தேகமில்லாமல் லாபம்தான்" என்றார் பெர்னாட்ஷா. "எப்படி" என்று கேட்டார் செய்தியாளர்.
அதற்கு பெர்னாட்ஷா "நான் சவரம் செய்து கொள்வதற்காகச் செலவிட்டிருக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் ஒரு நாடகமாவது எழுதி இருப்பேன் இல்லையா?" என்றார்.
ஆம் குழந்தைகளே.. நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். இன்று நாம் நேரத்தை கண்டுகொள்ளாவிட்டால் நாளை நேரம் நம்மை கண்டுகொள்ளாது, மற்றவர்களும் நம்மைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இதை நினைவில் கொண்டு உங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள்.