செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (15:55 IST)
உலகத்தில் ஒரு சில விஷயங்கள் இல்லாமல் இருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றும். ஜாதி, மதம், பணம், நோய், வறுமை போன்றவை. ஆனால் இங்கே சில இல்லைகள் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
அல்பேனியா நாட்டில் மதங்கள் இல்லை.
நியூசிலாந்து நாட்டில் காக்கைகளே இல்லை.
ஆப்கானிஸ்தானில் ரயில் போக்குவரத்து இல்லை.
ஆப்ரிக்காவில் புலிகள் இல்லை.
நிலவில் வாயு மண்டலம் இல்லை.
பாம்புக்கு காது இல்லை.
முதலைக்கு நாக்கு இல்லை.
யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை.அயர்லாந்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்களுக்கு வரிகள் இல்லை.அரேபியா நாட்டில் நதிகள் இல்லை.
மீனின் கண்ணில் இமை இல்லை. இந்தியாவில் எரிமலைகள் இல்லை.எந்தப் பறவைக்கும் வியர்வைச் சுரப்பி இல்லை.ஈ, எறும்பு முதலிய பூச்சிகளுக்கு கேட்கும் திறன் இல்லை.யானைகளுக்கு தூரப் பார்வை இல்லை.குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை.பூனைக்கு இனிப்பு சுவையை கண்டறியும் ஆற்றல் இல்லை.