வியாழன், 10 செப்டம்பர் 2009 (13:03 IST)
இந்த பொன்மொழிகள் உங்களது சிந்தனைக்கு. இதன்படி நடக்க முயற்சிக்கலாம் குழந்தைகளா..
நாம் செய்யும் தவறுகளுக்கு அனுபவம் என்னும் பெயர் சூட்டுகிறோம்.
நடந்தால் நாடெல்லாம் உறவு. படுத்தால் பாயும் பகை.
பணக்காரன் ஆவதற்கு பணம் சேர்க்காமல் செலவுகளை குறைத்தாலே போதுமானது.
காலின் சறுக்கல் வலியைத் தரும். நாவின் சறுக்கல் ஆளையே கொன்றுவிடும்.
பகை பொறாமை இவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னை திரும்பி வந்து சேரும்.
நா நயம் சொல்லுக்கு சிறப்பு. நாணயம் வாழ்க்கைக்கு சிறப்பு.
ஒரு துளி பேனா மை பத்து லட்சம் பேரை சிந்திக்க வைக்கும்.
பணக்காரனாக இருப்பது போல பாசாங்கு செய்வதாலேயே சில பேர் ஏழையாகவிடுகிறார்கள்.
நல்ல நண்பன் இல்லாதவன், காம்பில்லா மலரைப் போன்றவன்.