செல்பேசி மாணவ‌ர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கிறது

செவ்வாய், 24 நவம்பர் 2009 (11:36 IST)
ஸ்ரீச‌த்ய சா‌ய்பாபா ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன் 28வது ஆ‌ண்டு ‌விழா‌ ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் பே‌சிய ச‌த்ய சா‌ய்பாபா அவ‌ர்க‌ள், செ‌ல்பே‌சிக‌ள் மாணவ‌ர்களை தவறான பாதை‌க்கு அழை‌த்து‌ச் செ‌‌ன்று‌ ‌விடு‌கி‌ன்றன எ‌ன்று கரு‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த புதன்கிழமை முதல் சாய்பாபா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு நிகழ்ச்சியாக ஸ்ரீசத்ய சாய்பாபா பல்கலைக்கழகத்தின் 28-வது ஆண்டு விழா நடந்தது.

க‌‌ல்லூ‌ரி‌யி‌ல் படி‌க்கு‌ம் மாணவ‌ர்க‌ள், பல்வேறு பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்து‌ம் ‌வித‌ங்க‌‌ளி‌ல் போ‌ட்டிக‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டன. இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்ற 21 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி பாரா‌ட்டினா‌ர் ச‌த்ய சா‌ய்பாபா. ‌

பி‌ன்ன‌ர் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் பேசுகை‌யி‌ல், இன்றைய காலக்கட்டத்தில் செல்பே‌சிக‌ள் உபயோகிப்பது அதிகரித்து உள்ளது. செல்பே‌சிகளை பயன்படுத்துவதால் மாணவர்களின் புத்தி பேதலிக்கும் நிலை உள்ளது. இது அவர்களை தவறான வழியில் நடக்க தூண்டி விடுகிறது. செல்பே‌சிக‌ள் உபயோகிக்க கூடாது என்று உத்தரவிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெ‌ற்றோ‌ர்களு‌ம், த‌ங்களது குழ‌ந்தைகளு‌க்கு செ‌ல்பே‌சிக‌ள் தேவையா எ‌ன்பதை உண‌ர்‌ந்து அவ‌ர்களது வா‌ழ்‌க்கையை ‌சீ‌ர்குல‌ை‌க்கு‌ம் செ‌ல்பே‌சியை வா‌ங்‌கி‌த் தருவதை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். நாமே அவ‌ர்களு‌க்கு தவறான பாதை‌யி‌ல் போவத‌ற்கு வ‌ழிகா‌ட்டு‌ம் வகை‌யி‌ல் செ‌ல்பே‌சியை வா‌ங்‌கி‌க் கொடு‌த்து‌விட‌க் கூடாது.

மேலு‌ம், உயர்கல்வி முடித்த இளைஞர்களிடையே தற்போது வெளிநாட்டுக்கு சென்று அதிக அளவில் பணம் சம்பாதித்து செல்வந்தர்களாக ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. அந்த மாணவர்களை உருவாக்க நமது நாட்டு அரசு அதிக அளவில் செலவு செய்கிறது. ஆனால் அவர்கள் கல்வி முடிந்ததும் நாட்டைப்பற்றி சிந்திக்காமல், பணம் சம்பாதிப்பதே குறியாக கொண்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார்கள். எனவே மாணவர்களுக்கு கல்வியுடன் நாட்டுப்பற்றையும் போதிக்க வேண்டும் எ‌ன்று ச‌த்ய சா‌ய் பாபா கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்