இதுபோன்ற உணவுப் பொருட்களின் விற்பனைகு தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரங்களும், அதில் நடிக்கும் குழந்தைகளும், காரணமாகின்றனர். விளம்பரங்களில் காட்டப்படும் உணவுப் பொருட்களில் பெரும்பாலும் குழந்தைகளை குறி வைத்தே தயாரிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும் குழந்தைகளும் அதனை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதுபோன்ற பெரும்பாலான தின்பண்டங்கள், எண்ணையில் பொரிக்கப்பட்ட... உருவாக்கப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களே. இவை அனைத்துமே குழந்தைகளின் உடலை கெடுக்கக் கூடியவை. இன்றைய நாகரீக உலகின் நவீன தின்பண்டங்களான இவை, புதிய வடிவங்களில் பாக்கெட் செய்யப்பட்டு பல நாட்கள் கடைகளில் தொங்கவிடப் படுகின்றன. ரசாயனக் கலவையின் துணையோடுதான் இவை உற்பத்தி செய்யப்படுகிறது.
WD
தற்போது விற்பனையாகும் உணவுப் பொருட்களான நொறுக்குத் தீனிகள் பலவும் குழந்தைகளின் உடலை கெடுக்கும் உணவுகளாக இருந்தும் அவை பெருமளவு தயாரிக்கப்படுகின்றன.
தற்போது மருத்துவர்கள் இந்த மாதிரியான ஸ்நாக்ஸ் அயிட்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லுவது, இந்த நொறுக்குத் தீனிகள் அனைத்தும், மெழுகு கலவையால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை குழந்தைகள் சாப்பிடுவதால் சுகாதாரத்தை சிதைத்து விடும். மேலும் இந்த உணவுப் பொருட்கள் புதிய பல்வேறு நோய்களை உற்பத்தி செய்யும் விஷத் தன்மையுள்ளவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
உதாரணமாக, அந்த தின்பண்டங்களை எரித்துப் பார்த்தால் நீங்களே அதை கண்கூடாக அறிய முடியும். மெழுகுவர்த்தி போல் அவை எரியும்! இதை குழந்தைகள் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
இந்தமாதிரியான தின்பண்டங்களுக்குப் பதிலாக நீங்களே வீட்டில் வித விதமாக, கலர் கலராக தின்பண்டங்களை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட வையுங்கள். குறிப்பாக சத்தான உணவுகளை தயாரித்துக் கொடுத்து, சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொடுங்கள்.
சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்புப் பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் பி குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும்.
சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை கொடுக்கும். இவை குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவுப் பொருட்கள் உடலுக்கு சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.
இவை எல்லாம் நீங்கள் கடையில் வாங்கும் நொறுக்குத் தீணிகள் தருமா? சிந்தித்துப் பாருங்கள்.