பான் அட்டை சாதனை முறியடிப்பு

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (14:27 IST)
பிறந்து 33 நாட்களே ஆன குழந்தை நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை வாங்கி ஏற்கனவே இருந்த சாதனையை முறியடித்துள்ளது.

மும்பையில் அனீஷா என்ற பெண் குழந்தையின் பெற்றோர் குழந்தை பிறந்து 33 நாட்களில் பான் அட்டை வாங்கி, ஏற்கனவே குறைந்த வயதில் பான் அட்டை வத்திருந்த கிருஷ்ண சமீர் தாக்கர் என்ற குழந்தையின் சாதனையை முறிடித்துள்ளனர்.

2006 அக்டோபர் மாதம் 26ஆம் தேதி பிறந்த அனீஷாவிற்கு டிசம்பர் 1ஆம் தேதி பான் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை மிகப் பெருமையுடன் கூறினார் அனீஷாவின் தந்தை,

மிகக் குறைந்த வயதில் பான் அட்டை வைத்திருக்கும் பட்டியலில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் குழந்தை பர்னிக்கா, ரூர்கேலாவைச் சேர்ந்த ஆண் குழந்தை அயூஸ் ரஞ்சன், மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணே சமீர் தாக்கர் ஆகியோர் வரிசையில் 33 நாள்களில் பான் அட்டை பெற்று சாதனைகளை எல்லாம் முறியடித்துள்ளார் அனீஷா.

வெப்துனியாவைப் படிக்கவும்