சரஸ்வதிக்கு தனிக்கோயில்!

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (14:46 IST)
"சரஸ்" என்றால் பொய்கை என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் என்ற பொருளில் கலைமகள் சரஸ்வதி என்று அழைக்கப்பட்டாள்.

ஆனால் தமிழகத்தில் சரஸ்வதி தேவிக்கு என தனியாக கோயில்கள் அதிகம் கிடையாது. அதேப்போல சரஸ்வதியின் திருவுருவச் சிலையையும் அதிகம் கண்டிருக்க முடியாது.

தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கென்று ஒரே ஒரு தனிக்கோயில்தான் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்ப் புலவர்களும், மக்களும் கலைமகளைப் பெரிதும் போற்றினர் என்பதற்கு அக்கோயிலே சான்று.

webdunia photoWD
பேரளத்தை அடுத்த கூத்தனூரில்தான் கலைமகளின் தனிக்கோயில் இருக்கிறது. இவளை, "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி" என்று ஒட்டக்கூத்தர் போற்றுகிறார்.