ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களை உக்கப்படுத்தும் விதத்தில் தங்கம், வெள்ளி, வெண்கள பதக்கங்களை பெறும் வீரர்களுக்கு பரிசு தொகையை ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட உள்ளன.