பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில், இந்திய வீராங்கனை சிந்து, காலிறுதியில் உலகின் 2ம் நிலை வீராங்கனையான சீனாவை சேர்ந்த இகான் வாங்கை எதிர் கொண்டார்.
முதல் செட்டை 22-20 என போராடி வென்ற சிந்து, 2வது சுற்றிலும் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சாய்னாவுக்குப் பிறகு ஒலிம்பிக் அரையிறுதிக்கு தகுதி பெற்ற 2வது இந்திய வீராங்கனை சிந்து அரையிறுதியில் உலகின் 6ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒகுஹரா உடன் மோத உள்ளார்.
முன்னதாக கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா அரையிறுதிக்கு முன்னேறியதுடன், வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.