ஒலிம்பிக் போட்டி: ஜிம்னாஸ்டிக்கில் இந்தியா புதிய வரலாறு

திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (17:38 IST)
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


 

 
பிரேசில் நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் உலகப் புகழ்பெற்ற விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்ப்பில் 118 வீரர், வீராங்கனைகள் 15 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். 
 
இதில் இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முதலாக ஜிம்னாஸ்டிக் போட்டியில் திரிபுராவை சேர்ந்த தீபா கர்மகர்(22) என்ற வீராங்கனை பங்கேற்றார். அவர் பெண்கள் வால்ட் பிரிவில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்