உண்மையான வீரம் எது என்று நிரூபித்த விளையாட்டு வீரர்

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (13:11 IST)
போலாந்தை சேர்ந்த வட்டு எறியும் வீரர் பியோடர் மாலாசோவ்ஸ்கி புற்றுநோயால் அவதிப்படும் சிறுவனுக்கு உதவ தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டுள்ளார்.


 
 
போலாந்தை சேர்ந்தவர் பியோடர் மாலாசோவ்ஸ்கி (33), வட்டு எறியும் வீரர். 2008 மற்றும் கடந்த 21ம் தேதி நிறைவடைந்த ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளார். 
 
இந்நிலையில் ஓலக் என்ற சிறுவனின் தாய் பியோடருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஓலக்கிற்கு கண்ணில் புற்றுநோய் இருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளாக நோயுடன் போராடும் அவனுக்கு நியூயார்க்கில் சிகிச்சை அளிக்க உதவுமாறும் அவர் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
 
இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் தான் வாங்கிய வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விட்டு வரும் பணத்தை சிறுவனக்கு அளிக்க பியோடர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நான் ரியோவில் தங்கத்திற்காக போராடினேன். தற்போது அதை விட விலை மதிக்க முடியாத ஒன்றுக்காக போராடுமாறு அனைவரையும் அழைக்கிறேன் என்று பியோடர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
 
அவரது  போஸ்ட்டை பார்த்துவிட்டு பதக்கத்தை வாங்க பலர் முன்வந்துள்ளனர்.

அவரின் உதவும் உள்ளம் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்துள்ளனர். "இது தான் உண்மையான வீரம்", என்று அவருக்கு இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்