இசை, பிரதேசங்களையும், தலைமுறைகளையும் கடந்து பிரபலமாக விளங்குகிறது. அதைப் பாராட்டும் வகையில், அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது என்று சுனில்குமார் தெரிவித்தார். நிஷாகந்தி கொண்டாட்டம் தொடர்பான விடியோவையும், பிரசுரத்தையும் அமைச்சர் வெளியிட்டார். ஆண்டுதோறும் நடைபெறும் நிஷாகந்தி திருவிழா, வரும் 20ஆம் தேதி தொடங்கி, 8 நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில், இசை, நடனம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 20ஆம் தேதி நடைபெற உள்ள தொடக்க நிகழ்ச்சியில் பிரபல இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் பிரசாத்தின் மகள் அனுஷ்கா சங்கரின் சிதார் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.