வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படை அம்சம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல். எல்லாமே இறவன் படைப்பு என்பதால் இறைவனின் குறிப்பிட்ட சில படைப்புகளை அலட்சியப்படுத்தி விட்டோ, வெறுத்து விட்டோ இறவனை யாரும் அடைய முடியாது.
கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவர் அவரை சாதி, சமயம், மதம் என்ற குறுகிய வட்டங்களுக்குள் அடைத்து விட முயற்சி அறியாமையே ஒழிய ஆன்மிகம் அல்ல. வள்ளலார் கடவுள் குறித்து கூறிய கருத்துக்கள் இவை.