நினைத்தல், நிச்சயித்தல் என்பன மனதின் தர்மங்கள். இதுவே இந்திரியங்களுக்குக் கண்போன்ற இடம். இந்திரியங்கள் வெளியே இருப்பதால் "புறக்கரணம்" என்றும், மனம் உள்ளே இருப்பதால் "அகக்கரணம்" என்றும் அறியப்படுகின்றன.
மனம் அலைபாயும் போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.