பார்த்தசாரதி பெருமாள் கோ‌யி‌ல்

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:03 IST)
மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌ரி‌ன் அவதாரமான பா‌ர்‌த்தசார‌தி‌யி‌ன் கோ‌யி‌ல் ‌செ‌ன்னை ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.

webdunia photoWD
108 திவ்ய தேசங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலு‌ம் ஒன்றாகும்.

இ‌ந்த கோ‌யிலு‌க்கு பல பெரு‌ம் ‌சிற‌ப்புக‌ள் உ‌ள்ளன. பிருந்தாரண்ய ஸ்தலம் என்றும், பஞ்ச வீரத்தலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம்.

இ‌ந்த கோ‌யி‌‌லி‌ல் அமை‌ந்‌திரு‌க்கு‌ம் பா‌ர்‌த்தசார‌‌தி‌யி‌ன் ‌திரு‌முக‌த்‌தி‌லபல தழு‌ம்புக‌ள் இரு‌க்கு‌ம். அதாவது மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள் அவை. மேலு‌ம் ‌கிருஷ‌்ண அவதார‌ங்க‌ளி‌ல் ‌மீசையுட‌ன் காண‌ப்படு‌‌ம் அவதாரமு‌ம் இவ‌ர். அ‌ர்ஜூனனபா‌ர்‌த்தஎ‌ன்றஅழை‌ப்பா‌ர்க‌ள். தேரோ‌ட்டியசம‌ஸ்‌கிருத‌த்‌தி‌லசார‌தி எ‌ன்றகூறுவா‌ர்க‌ள். எனவபா‌ர்‌த்த‌னி‌னசார‌தியாவ‌ந்வ‌பா‌ர்‌த்தசார‌தி எ‌ன்றஅழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌க்கோ‌யி‌லி‌‌ல் பா‌ர்‌த்தசார‌தி‌க்கு‌ம், நர‌சி‌ம்மரு‌க்கு‌மத‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ளஅமை‌க்க‌ப்ப‌‌ட்டிரு‌க்கு‌ம்கோ‌யி‌லி‌னஅமை‌ப்ப

webdunia photoWD
கோ‌யி‌லி‌லஅமை‌ந்‌திரு‌க்கு‌மமூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். பெரு‌ம்பாலு‌மபெருமா‌ளதனதகுடு‌ம்ப‌த்தாருட‌னகா‌ட்‌சி அ‌ளி‌ப்பது ‌மிகவு‌மஅ‌‌ரிதாகு‌ம்.

சுமதி என்ற தொண்டைமான் மன்னனுக்கு ஏழுமலையான், பார்த்தசாரதியாக அரு‌ளபா‌லி‌த்தல‌மஎ‌ன்றஇ‌ந்கோ‌யி‌லி‌‌னவரலாறகூறு‌கிறது.

இவரு‌க்கஅடு‌த்ததாபா‌ர்‌த்தசார‌தி ச‌‌ன்ன‌தி‌க்கவலதபுற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌ததாயா‌‌ரி‌னச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது. ஒ‌‌வ்வொரவெ‌ள்‌ளி‌க்‌கிழமையு‌மவேதவ‌ல்‌லி‌ததாயாரு‌க்கு ‌சிற‌ப்பபூஜைக‌ளநட‌த்த‌ப்படு‌ம்.


webdunia photoWD
அடு‌த்ததாபா‌ர்‌த்தசார‌தி‌ ச‌ந்‌நிதி‌யி‌ன் ‌பி‌ன்புற‌த்‌தி‌ல், மே‌ற்கநோ‌க்‌கியபடி உ‌க்‌கிர ‌நிலை‌யி‌லஸ்ரநர‌சி‌ம்சுவா‌மி‌யி‌னச‌ந்‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. இவரஅழ‌கிய ‌சி‌ங்க‌ரஎ‌ன்று‌மஅழை‌ப்ப‌ர். இவரதஉ‌க்‌கிர‌மத‌ணி‌க்கு‌மவகை‌யி‌லநர‌சி‌ம்சுவா‌மி‌யி‌ன் ‌திருமா‌ர்‌பி‌லல‌‌ஷ‌்‌மி தே‌வி‌யி‌ன் ‌திருவுருவ‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். அவரதமுக‌த்தை‌ எ‌ப்படி‌பபா‌ர்‌த்தாலு‌ம் ‌சி‌ரி‌த்தபடியநம‌க்கு‌ககா‌ட்‌சி அ‌ளி‌ப்பா‌ர்‌.

webdunia photoWD
அடு‌த்ததாகஜே‌ந்‌திவரதராசுவா‌மிக‌ளி‌னச‌ந்‌நி‌தி வேதவ‌ல்‌லி‌ததாயா‌ரச‌ந்‌நி‌தி‌க்கு ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌கிழ‌க்கநோ‌க்‌கியபடி அமை‌ந்து‌ள்ளது. அதாவதகஜே‌ந்‌திரஎ‌ன்யானை ‌நீ‌ர்‌நிலஒ‌ன்‌றி‌லத‌ண்‌ணீ‌ரகுடி‌க்க‌சசெ‌ன்றபோதஅ‌ங்‌கிரு‌ந்முதலை‌யி‌னவா‌யி‌லச‌ி‌க்‌கி‌ககொ‌ண்டது. தனதஉ‌யிரை‌ககா‌ப்பா‌ற்றுமாறயானபெருமாளவே‌ண்டியது. அ‌ப்போதஉடனடியாகருட‌னி‌லவ‌ந்பெருமா‌ளமுத‌லை‌யிட‌மமா‌ட்டி‌யிரு‌ந்யானையை ‌‌மீ‌ட்டா‌ர். அ‌ப்போதயானை‌க்கஅரு‌ளபா‌லி‌த்த ‌நிலை‌யி‌லஇ‌ந்ச‌ந்‌‌நி‌தி‌யி‌லகஜே‌ந்‌திவரதராசுவா‌மிகளாப‌க்த‌ர்களு‌க்ககா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறா‌ர்.

webdunia photoWD
பா‌‌ர்‌த்தசார‌தி ச‌ந்‌‌‌நி‌தி‌யி‌னஇடதபுர‌த்‌தி‌லஆ‌ண்டா‌ளி‌னச‌ந்‌‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. ஆ‌ண்டா‌ளபூதே‌வி எ‌ன்று‌மஅழை‌க்க‌ப்படு‌கிறா‌ர்.

இந்த கோயில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி சரஸ் என்பதாகும். இந்த திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது.

கோ‌யி‌லி‌னசிறப்பு

இ‌‌த்‌திரு‌த்தல‌த்‌தி‌லபிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சி கொடுத்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகு‌ம்.

ஐப்பசி மாத திருமூல நன்னாளில் நடைபெறும் கைத்தல சேவை சிறப்பு வாய்ந்தது. உரியடி திருவிழா, இராப்பத்து, பகல்பத்து திருவிழாக்கள் சிறப்புடையவை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இந்த கோயிலில் சிறப்பாக வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

வழிபாட்டு நேரம்

தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். த‌மிழஅர‌சி‌னஅ‌ன்னதான‌த் ‌தி‌ட்டமு‌மசெய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது.

எ‌ப்படி‌சசெ‌ல்வத

பற‌க்கு‌மர‌யி‌லசேவை‌யி‌ல் ‌திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம். ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி பேரு‌ந்து‌ ‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்தநட‌‌ந்தசெ‌ல்லு‌மதூர‌த்‌தி‌லேயஇ‌க்கோ‌யி‌லஅமை‌ந்து‌ள்ளது. சென்னையி‌எ‌ல்லமு‌க்‌கிபேரு‌ந்தவ‌ழி‌த்தட‌ங்க‌ளி‌‌ல் இருந்தும் இங்கு பேருந்துகள் விடப்படுகின்றன. செ‌ன்னமெ‌ரினகட‌ற்கரை‌க்கு‌சசெ‌ல்லு‌மபேரு‌ந்துக‌‌ளபலவு‌ம் ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி வ‌ழியாக‌த்தா‌னசெ‌ல்‌கி‌ன்றன.