வீட்டு தோட்டத்தில் உள்ள பசுமையான மரங்களில் காகம் கூடு கட்டுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அவ்வாறு கூடு கட்டுவது அந்த வீட்டாருக்கு செல்வத்தையும், செழிப்பையும் அளிக்கும். அதேசமயம் காகம் பட்டுப்போன, தீயினால் எரிந்து போன மரத்தில் கூடு கட்டினால் அது எதிர்கால துன்பத்தை முன்னறிவிப்பதாக கருதப்படுகிறது.
காகங்கள் கூட்டமாக கரைந்து கொண்டே ஒரு ஊரையோ, கிராமத்தையோ சுற்றி வந்தால் அப்பகுதிக்கு நடக்கவிருக்கும் துன்பங்களை முன்னறிவிப்பதாக உள்ளது. ஒருவர் பயணம் செய்யும்போது காகம் வலம் இருந்து இடம் போவது லாபத்தையும், இடமிருந்து வலம் போவது நஷ்டத்தையும் குறிக்கிறது. ஒரு வீட்டிலிருந்து காகம் பாத்திர, பண்டங்களை தூக்கி செல்வது அபசகுணமாக கருதப்படுகிறது.