இந்த நிலையில், மே 23 ஆம் தேதி, விரதம் இருந்து அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால் குடம், கம்புத்தொட்டில், மாவிளக்கு, பூமுடி போன்ற நிகழ்ச்சிகளைக் கொண்ட திருவிழா நடைபெற்றது. இதே போன்று இன்றும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். அதிகாலை முதலே அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு, பக்தியோடு பல அடி நீளம் கொண்ட அலகை தனது கன்னத்தில் குத்திக்கொண்டு பல கிலோ மீட்டர் தொலைவு தூரம் வந்து அம்மன் வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.