அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்.
தங்கள் முன் வாசலை திறந்து வைப்பார்கள். அதிகாலை இலக்குமி வீட்டிற்குள் வரும் நேரம் என்பது நம்பிக்கை. இவ்வதிகாலை பொழுதே பிரம்ம முகூர்த்தமாகும். இக்காலத்தில் எழுந்து படித்தால் ஒரு போதும் மனதிலிருந்து மறக்காது தலையில் இடது பக்கம் இருக்கும் கல்வி மையம் செயற்படும் போது படிப்பது மிகவும் பயனைத் தரும் என்பது விஞ்ஞான கண்டுபிடிப்பு. இதனால் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும்.