ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விசிக-வில் இருந்து நீக்கம்..!

Senthil Velan

செவ்வாய், 5 மார்ச் 2024 (13:47 IST)
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் அகமது சலீம் விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
 
டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
 
இதில், தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக பிரமுகமான  ஜாபர் சாதிக் என்பது தெரிந்தது.
 
இதையடுத்து, அவரை விசாரிக்க முயன்றபோது தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

ALSO READ: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடக்கம்..! தேர்தலுக்கான நாடகம் என எம்.பி வெங்கடேசன் விமர்சனம்..!!
 
இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசிக விடுத்துள்ள அறிக்கையில், “கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் முகமது சலீம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்