ரூ. 2 கோடியே 47 லட்சம் மோசடி வழக்கில் யுவராஜ்

சனி, 9 ஜனவரி 2016 (01:26 IST)
ரூ. 2 கோடியே 47 லட்சம் ஈமு கோழி மோசடி வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 

 
கடந்த 2012 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பல்வேறு ஈமு கோழி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த ஈமு நிறுவனம் ஒன்று, 121 முதலீட்டாளர்களிடம் 2 கோடியே 47 லட்சம் ரூபாய் பண மோசடி செய்தது. இது குறித்து பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
இந்த வழக்கில், அந்நிறுவன உரிமையாளர்கள் பெருந்துறை  தமிழ்நேசன்,  சங்ககிரி யுவராஜ், சூரம்பட்டி வாசு ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
 
தலித் மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளியாக உள்ள யுவராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
 
இந்த நிலையில், தலித் மாணவன் கோகுல் ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்து, ஈமு கோழி மோசடி வழக்கில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்