ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஆஜராக மதனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மதன் தலைமறைவானார். இந்நிலையில் பப்ஜி மதனின் தந்தை, மனைவி கிருத்திகா ஆகியோரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.
இந்நிலையி, யூ-டியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. யூ-டியூபர் மதன் நடத்தும் சேனலின் நிர்வாகி என்பதால் கிருத்திகாவை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், யூ-டியூப்பில் ஆபாசமாக பேசி பப்ஜி மதன் மாதம் ரூ.7 லட்சம் சம்பாதித்ததை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இதனோடு பிப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.