கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய யூடியூப் பிரபலம் கைது!

வெள்ளி, 11 ஜூன் 2021 (21:31 IST)
கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய யூடியூப் பிரபலம் கைது!
யூடியூபில் பிரபலமான சாட்டை துரைமுருகன் என்பவர் கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது துரைமுருகன் திருச்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை முருகன் பல ஆவேசமான வீடியோக்களை தனது யூடியூபில் பதிவு செய்து வருபவர். இவர் திருச்சியில் உள்ள கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டியதாக கூறப்படுகிறது
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் உள்பட 4 பேரையும் திருச்சி கேகே நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி அவமதித்து விட்டதாக கூறியவரின் கடைக்கு சென்று மிரட்டி வீடியோ எடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்