சாலையில் சோப்பு போட்டு குளித்து போராடிய இளைஞர்? வைரல் வீடியோவால் நடவடிக்கை எடுத்த கலெக்டர்

Arun Prasath

வியாழன், 6 பிப்ரவரி 2020 (17:06 IST)
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை அனைவரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல அந்நீரில் சோப்பு போட்டுக் குளித்து போராட்டம் நடத்தியுள்ளார் ஓர் இளைஞர்.

திருப்பூர் மாவட்டத்தின் அவினாசி சாலையில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வந்தது. பல நாட்களாக இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற இளைஞர், இதனை அனைவரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல, சாலையில் வீணாகும் தண்ணீரில் சோப்பு போட்டு குளித்தார்.

இதனை ஒரு வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய்கார்த்திகேயன், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Social activist in #Tiruppur took bath in a pit filled with drinking water after a pipe was found leaking for the last few days. He took this decision to grab the attention of the corporation employees who failed to check the leak even after multiple complaints. pic.twitter.com/XpYHlsAlbO

— Mugilan Chandrakumar (@Mugilan__C) February 5, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்