சசிகலா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி..!

Mahendran

வெள்ளி, 1 மார்ச் 2024 (11:45 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி இன்று சசிகலா வீட்டிற்கு சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

சசிகலா சமீபத்தில் புதிய வீடு கட்டிய நிலையில் அந்த வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பல பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
 
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சசிகலாவின் வீட்டுக்கு சென்று வீடு கோவில் போல் இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார். அந்த வகையில் தற்போது ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி களில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி இன்று சசிகலாவின் ஜெயலலிதா இல்லத்தில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பரிசு பொருட்களையும் வழங்கி உள்ளார்

மேலும் ஜெயலலிதா குறித்து இருவரும் பல்வேறு விஷயங்களை இந்த சந்திப்பின்போது பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவசங்கரியை அடுத்து இன்னும் சில பிரபலங்கள் சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்