நிர்வாண போராட்டம் கூடாதா? பொள்ளாச்சி வழக்கில் பிரபலத்தின் பகீர் பேட்டி

வெள்ளி, 15 மார்ச் 2019 (21:00 IST)
பொள்ளாச்சியில் 7 வருடங்களாக நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு உள்பட நால்வர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பொள்ளாச்சி, கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கருத்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் எழுத்தாளர் கொற்றவை இந்த கொடுமை குறித்து அதிரடியாக பேசியுள்ளார். 
அவர் கூறியதாவது, இந்த கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக, மணிப்பூரில் ஏற்கனவே நடந்தது போன்று நாம் ஏன் நிர்வாணமாக ரோட்டில் நடந்து சென்று கோட்டையை முற்றுகையிட கூடாது? என கேட்டுள்ளார். 
 
மேலும், இதில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் குறைந்தப்பட்சம் அந்த விஷயத்தை வெளியில் கூற வேண்டும் அப்போதுதான் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்