14 வயதில் உலக சாம்பியனான சிறுவன் : குவியும் பாராட்டுக்கள்...ஹெச். ராஜா உருக்கம்

திங்கள், 14 அக்டோபர் 2019 (15:11 IST)
தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானானந்தா. இவர் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார். இவருக்கு ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரக்ஞானானந்தா இவர் மிகத் திறமையான செஸ் வீரராக அறியப்படுகிறது. ஏற்கவே பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று சர்வதேச மாஸ்டர்(IM) மற்றும் கிராண்ட் மாஸ்டர் (GM) ஆகிய பட்டங்களை தனதாக்கிக் கொண்டுள்ளார். இந்நிலையில்,  இன்று, மும்பையில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன் சிப் போட்டியில் பிரக்ஞானானந்தா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது :14 வயதிலேயே உலக சாம்பியனான பிரக்ஞானானந்தா. இவர் வயது பிரிவில் உலக பட்டத்தை வென்ற முதல் ஆண் செஸ் வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.ஏற்கனவே சர்வதேச மாஸ்டர்(IM) & கிராண்ட்மாஸ்டர்(GM) என்ற பட்டங்களை கொண்டுள்ளார். மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்; இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

14 வயதிலேயே உலக சாம்பியனான பிரக்ஞானானந்தா. இவர் வயது பிரிவில் உலக பட்டத்தை வென்ற முதல் ஆண் செஸ் வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.ஏற்கனவே சர்வதேச மாஸ்டர்(IM) & கிராண்ட்மாஸ்டர்(GM) என்ற பட்டங்களை கொண்டுள்ளார். மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்

That's the walk of a WINNER!!! U18 Champion Praggnanandhaa walks to receive his first GOLD in U18 category!!!#chess #championsoflife #WorldYouthChessChampionship pic.twitter.com/RAILw4VzmE

— World Youth Chess Championship (@WorldChess2019) October 12, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்